Latestமலேசியா

கோவிட்-19 : நாட்டில் புதிதாக 82 பேர் பாதிப்பு

புத்ராஜெயா, செப் 22 – கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 82 பேர் புதிதாக கோவிட்-19 பெருந்தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் பத்து பேருக்கு வெளிநாடுகளில் இருந்த போது அந்நோய்க்கிருமி பரவியுள்ளது. ஏனைய 72 பேர் உள்ளூரில் நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் என சுகாதாரத் துறை தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
உள்ளூரில் நோய்த் தொற்றுக்கு ஆளான 72 பேரில் 49 பேர் மலேசிய பிரஜைகள், எஞ்சிய 23 பேர் அந்நிய பிரஜைகள் ஆவர்.
இப்புதிய சம்பவங்களைத் தொடர்ந்து நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 10,358ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மரணம் ஏதும் பதிவாகவில்லை. எனவே நாட்டில் மரண எண்ணிக்கை 130ஆகத் தொடர்ந்து நீடிக்கிறது.
இந்நோய்த் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளவர்களில் மேலும் 168 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்னும் 9 பேர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில் இருவருக்கு, செயற்கை சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுவதாக டாக்டர் நோர் ஹிஷாம் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!