Latestஇந்தியாஉலகம்சினிமா

கோவிட்-19 நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தனர் விஜயகாந்த்-பிரேமலா தம்பதியர்!

சென்னை, அக் 2 – கோவிட்-19 நோய்த் தொற்றில் இருந்து பூரண குணமடைந்திருப்பதை அடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் அவரது மனைவி பிரேமலதாவும், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உடல்நலக் குறைவுக்கு ஆளாகியிருந்த விஜயகாந்த்தும் அவரது மனைவியும் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்கள் மீது நடத்தப்பட்ட பரிசோதனையில் அவ்விருவருக்கும் கோவிட்-19 நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது.

இந்நிலையில் இருவரும் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைத்ததை அடுத்து, அவ்விருவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

தற்போது நோயில் இருந்து முழுமையாக விடுபட்டிருப்பதால் அவ்விருவரும் மருத்துவமனையில் இருந்து வெளியேற அனுமதியளிக்கப் பட்டிருப்பதாக அந்நிர்வாகம் கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!