Latestமலேசியா

கோவிட்-19 : புதிதாக 38 பேருக்கு தொற்று கண்டுள்ளது

கோலாலம்பூர், ஏப் 26 – நாட்டில் இன்று  கோவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 38 ஆக பதிவாகியுள்ளது.இன்றைய கணக்கெடுப்பின் படி 100 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை தொற்று கண்ட  5,780-லிருந்து  67 % அதாவது 3,862 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதார தலைமை இயக்குனர் நோர் இஷாம் அப்துல்லா தெரிவித்தார். இந்நிலையில், 1,820 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அவர் குறிப்பிட்டார். மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 98ஆக பதிவாகியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!