Latestமலேசியா

விபத்துக்குக் காரணமான ஆடவரை துரத்திச் சென்று பொது மக்கள் தாக்கியதில், அவர் உயிரிழந்தார்

செமன்ஞே, பிப்ரவரி 21 – சிலாங்கூரில் விபத்தொன்றுக்குக் காரணமான ஆடவரை, பொது மக்கள் துரத்தி, காரில் இருந்து இழுத்து, கைகளைக் கட்டி, சரமாரியதாகத் தாக்கியல், அவர் இறந்தே போனார்.

Semenyih-வில் Proton Saga காரில் வந்த 42 வயது அந்நபர், p-hailing ஓட்டுநருடன் விபத்தில் சிக்கியதைக் கண்ட பொது மக்கள் அவரைத் துரத்திச் சென்றிருக்கின்றனர்.

அப்போது அவரின் கார் கட்டுப்பாட்டை இழந்து வீடமைப்புப் பகுதியின் வேலியில் மோதி நின்றது.

அப்போது காரில் இருந்து அவரை பொது மக்கள் வெளியே தரதரவென இழுத்து, அடித்து உதைத்ததில், அவர் உயிரிழந்ததாக தெரிகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்த அம்புலன்ஸ், அங்கு கைகள் கட்டப்பட்டு, தரையில் கிடந்த ஆடவர் உயிரிழந்து விட்டதை உறுதிச் செய்தது.

புக்கிட் அமான் தடயவியல் குழு சம்பவ இடத்தில் மேற்கொண்டு விசாரணைகளை மேற்கொள்கிறது.

கைவிரல் ரேகைப் பதிவு, ரத்த மாதிரி உள்ளிட்டவை விசாரணைக்காக சம்பவ இடத்தில் இருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன.

விசாரணைகள் மேற்கொண்டதில், Semenyih மற்றும் Beranang சுற்று வட்டாரத்தில் அதிகாலை 2 மணிக்கு 25 முதல் 52 வயது வரையிலான ஐந்து ஆடவர்களை போலிஸ் கைதுச் செய்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் எசிஸ்டண்ட் கமிஷனர் முஹமட் ஜாஹிட் ஹசான் தெரிவித்தார்.

ஐவரும் விசாரணைக்காக பிப்ரவரி 25-ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Serdang மருத்துவமனையில் சவப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், சம்பவம் நடந்த இடத்தருகே முதலில் ஏற்பட்ட விபத்தே இரண்டாவது சம்பவம் நிகழ மூலக் காரணமாக இருந்திருப்பதாக தெரிகிறது.

துரத்தி வந்த பொது மக்களிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியின் போது தான் அவர் அவர்களின் கையில் சிக்கி உயிரிழந்திருக்கிறார்.

எனினும், முதல் விபத்து குறித்து இதுவரை புகார் ஏதும் செய்யப்படவில்லை என்றார் அவர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொது மக்கள் பின் வரும் எண்களைத் தொடர்புக் கொண்டு விசாரணைக்கு உதவுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!