Latestமலேசியா

கோவிட்-19 : பூரண குணமடைந்து வீடு திரும்பினார் சபா முதலமைச்சர்!

கோத்தா கினபாலு, அக் 18 – சபா முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஹஜிஜி நூர் (Datuk Seri Hajiji Noor) கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளார்.

இதனையடுத்து, கோத்தா கினபாலுவிலுள்ள குயீன் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று வீடு திரும்பியிருக்கின்றார்.

அதோடு டத்தோஸ்ரீ ஹஜிஜியின் துணைவி டத்தின்ஸ்ரீ ஜூலியா சாலாக் (Datin Seri Julia Salag)க்கும் இன்று காலை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார்.

தாங்கள் குணமடைய வேண்டிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் தாங்கள் நன்றி கூறுவதாக டத்தோஸ்ரீ ஹஜிஜி தெரிவித்தார்.

இந்நிலையில் சபாவில் கோவிட்-19 நோய்த் தொற்றைத் துடைத்தொழிக்க, மாநில அரசாங்கம் கடும் முயற்சிகளை எடுத்து வருவதாக டத்தோஸ்ரீ ஹஜிஜி கூறினார்.

அதேசமயம் மக்கள் உயர் கட்டொழுங்குடன் விதிமுறைகளை முழுமையாகக் கடைபிடித்தால் தான், இந்நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தவும் ஒழிக்கவும் முடியும். எனவே இவ்விஷயத்தில் மக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியம் டத்தோஸ்ரீ ஹஜிஜி வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!