
கோத்தா கினபாலு, செப் 17 – சபா, லஹாட் டாத்து (Lahad Datu)வில் 3 பள்ளிகளைச் சேர்ந்த 6 மாணவர்களுக்கும் 7 ஆசிரியர்களுக்கும் கோவிட்-19 நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் தற்போது லஹாட் டாத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் லஹாட் டாத்து மாவட்ட போலீஸ் தலைமையகத் தடுப்பறையில் வைக்கப்பட்டிருந்த 35 கைதிகளுக்கு அந்நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியிருப்பதாகவும் சபா மாநில சுகாதாரத் துறை இயக்குனர் டத்தோ டாக்டர் கிறிஸ்டினா ருண்டி (Datuk Dr Christina Rundi) தெரிவித்தார். அந்த 35 பேரில் 20 பேர் வெளிநாட்டு ஆடவர்கள், மேலும் 15 பேர் உள்ளூர்வாசிகள் என கிறிஸ்டினா கூறினார்.
நேற்று வரை சபாவில் 937 கோவிட்-19 நோய்ப் பரவல் சம்பவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை, லஹாட் டாத்து, சண்டாக்கான், தாவாவ், குனாக், கோத்தா கினபாலு ஆகிய 5 மாவட்டங்களை உட்படுத்தியவை ஆகும்