Latestஉலகம்வாழ்க்கை

கோவிட்-19 வைரஸ் ஆண்களின் விந்தணுக்களைப் பாதிக்கும் 

பாரீஸ், ஜன 30 – கோவிட்-19 வைரஸ் ,  ஆண்களின் விந்தணுக்களைப் பாதிக்கக் கூடுமென, அண்மைய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

சுவாசத் துளிகளால் மற்றொருவருக்கு பரவும் கோவிட்-19 வைரஸ், உடலின் நுரையீரல், சிறுநீரகம், குடல், இருதயம் ஆகியவற்றைப் பாதிக்கின்றது.

அதோடு, ஆண்களின் குழந்தை பேறு தன்மையையும் பாதிக்குமென கண்டறியப்பட்டுள்ளது. அந்த வைரஸ்  விந்து செல்களின் உற்பத்தியைப் பாதிப்பதோடு,  ஹார்மோன்களின் உற்பத்தியிலும்  பிரச்சனையை ஏற்படுத்தும்.

எனினும், அந்த புதிய மருத்துவ ஆராய்ச்சி, ஆண்களின் குழந்தை பேறு தன்மையை எந்தளவிற்கு பாதிக்குமென்பது உறுதியாக தெரியவரவில்லை.

கோவிட்-19 தொற்று கண்டிருந்த  84 ஆண்களை உட்படுத்தி,    ஜெர்மனியிலுள்ள, ஜஸ்டஸ்-லைபிக்- (Justus-Liebig ) பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வினை மேற்கொண்டிருந்தனர்.

இந்த ஆய்வின் முடிவை, மருத்துவ துறையின் இதர நிபுணர்கள் வரவேற்றிருக்கும் நிலையில், தகவலை மேலும் உறுதிப்படுத்த இன்னும் ஆழமான ஆராய்ச்சிகள் தேவையென கூறியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!