Latestமலேசியா

கோவிட் 4 இலக்காக உயரும் அபாயம் சிலாங்கூரில் 132 பேர் உட்பட புதிதாக 862 பேருக்கு தொற்று

புத்ரா ஜெயா, அக் 20- நாட்டில் கோவிட் -19 தொற்றின் 3ஆவது அலை விரைவில் 4 இலக்காக உயரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இம்மாதம் 6ஆம் தேதியிலிருந்த தினசரி சராசரி 600க்கு மேற்பட்டோர் தொற்றுக்கு உள்ளாகி வந்த நிலையில் இன்று இந்த எண்ணிக்கை 862ஆக உயர்ந்தது. உள்நாட்டில் இந்த தொற்றுக்கு 860பேரும் வெளிநாட்டிலிருந்து மேலும் இருவரும் இந்த தொற்றுக்கு உள்ளாகினர்.

சபாவில் மட்டும் இன்று 673 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகினர். கோத்தா கினபாலு கெப்பாயான் சிறைச்சாலை மூலமாக மட்டும் 231 பேருக்கு தொற்று பரவியுள்ளது. மேலும் சிலாங்கூரில் 132 பேருக்கும், கெடாவில் 17 பேருக்கும், பேராவில் 9 பேருக்கும் தொற்று பரவியுள்ளது. இதன்வழி இதுவரை இந்த தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 22,225 ஆக உயர்ந்துள்ளது. சுகாதாரத்துறையின் தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா இதனை தெரிவித்தார்.

இன்று மேலும் மூவர் மாண்டனர். இதன் வழி நாட்டில் கோவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 193ஆக உயர்ந்தது. 634 பேர் குணமடைந்தனர். இந்த தொற்றிலிருந்து முழுமையாக 14,351பேர் குணமடைந்துள்ளர். மருத்துவமனைகளில் இன்னமும் 7,681பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சபா கோதா பெலுத்தில் புதிய தொற்று மையம் கண்டறியப்பட்டது. இன்று நன்பகல் மணி 12.30 வரை இந்த தொற்று மையத்திலிருந்து 21 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!