Latestமலேசியா

சட்டவிரோத குடியேறிகளில் 20,000 த்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்

கோலாலம்பூர், ஆக 5- இவ்வாண்டு ஜனவரி தொடக்கத்திலிருந்து ஜூலை 23ஆம் தேதிவரை குடிநுழைவு தடுப்பு முகாமில் தடுத்த வைக்கப்பட்டிருந்த 20,297 சட்டவிரோத குடியேறிகள் அவர்களது நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 5,613 இந்தோனேசிய பிரஜைகள், 3,990 மியன்மார் பிரஜைகள், 2664 வங்காளதேசிகள் ஆகியோரும் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் அடங்குவர்.

இதர நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளும் அவர்களது நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சட்டவிரோத குடியேறிகள் நாட்டிற்குள் நுழைவதை தடுப்பதற்காக எல்லைப் பகுதிகளில் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடின் கூறினார்.

கடந்த ஜனவரி முதல் ஜூலை 23ஆம் தேதிவரை சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக 4,400க்கும் மேற்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன்வழி 18,092 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர் என அவர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!