Latestமலேசியா

சந்தேக நபர்களைத் துரத்திச் சென்ற ரோந்து கார் விபத்தில் சிக்கியது; போலீஸ்காரர் பலி!

ஜோகூர் பாரு, நவ 1 – ஜோகூர், கம்புங் கங்கார் தெப்ராவ் (Kampung Kangkar Tebrau)வில் போலீஸ் ரோந்து கார், மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் போலீஸ்காரர் உயிரிழந்தார். மற்றொரு போலீஸ்காரர் படுகாயமடைந்தார்.

அதிகாலை ஆறரை மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தின் போது இரு சந்தேக நபர்கள் பயணித்தக் காரைத் துரத்திச் சென்று கொண்டிருந்த போது, போலீசின் ரோந்து வாகனம், சந்தேக நபர்கள் இருந்த காரை உரசி, பின்னர் அருகே சென்று கொண்டிருந்த SUV வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இச்சம்பவத்தில் ரோந்து காரில் பயணிகள் இருக்கையில் அமர்ந்திருந்த போலீஸ்காரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக, தெப்ராவ் தீயணைப்பு மீட்பு நிலையத் தலைவர் சைஃபுல் பாரி சாஃபார் (Saiful Bahri Safar) தெரிவித்தார்.

ரோந்துக் காரைச் செலுத்திய போலீஸ்காரர் இதில் படுகாயமடைந்தார். இவ்விபத்தில் SUV வாகனத்திலிருந்த ஓட்டுனரும் பயணியும் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். உயிரிழந்த போலீஸ்காரரின் சடலம், அடுத்த கட்ட நடவடிக்கைக்காகப் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சைஃபுல் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!