Latestஉலகம்

சபரிமலை வரும் பக்தர்கள், கோவிட்-19 இல்லை எனும் சான்றிதழைப் பெற்றிருப்பது கட்டாயம்!

திருவனந்தபுரம், அக் 16 – சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக இந்திய நேரப்படி இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுவதை அடுத்து, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அவ்வகையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள், தங்களுக்கு கோவிட்-19 நோய்க்கிருமி பீடிக்கவில்லை என்பதை உறுதிச் செய்யும் சான்றிதழை, 48 மணி நேரத்துக்கு முன்பாக பெற்றிருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப் பட்டிருப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

அம்மருத்துவச் சான்றிதழ் வைத்திருக்காத பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அவர் கூறினார்,

இணையம் வாயிலாக முன்பதிவு செய்து வரும் பக்தர்களில் தினமும் 250 பேர் மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு நிலக்கல்லில் கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

பக்தர்கள் கோயிலில் தங்குவதற்கு அனுமதி இல்லை. பம்பை ஆற்றில் பக்தர்கள் குளிக்கக் கூடாது என்பதும் அவ்விதிமுறைகளில் அடங்கும் என பினராயி விஜயன் அறிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!