Latestமலேசியா

சபாவில் 3,000 த்திற்கு மேற்பட்ட குழந்தைகள் -சிறார்களுக்கு கோவிட் தொற்று

கோத்தா கினபாலு, நவ 21 – சபாவில் நேற்றுவரை 3,030 குழந்தைகள் மற்றும் சிறார்கள் கோவிட் -19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். சபா மாநிலம் முழுவதிலும் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் இது 12.5 விழுக்காடாகும் என அம்மாநில வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சர் மஷிடி மன்ஜூன் ( Mashidi Manjun) தெரிவித்தார்.

5 வயதிற்கும் குறைவான 1,241 குழந்தைகளும் 1 வயதுக்கும் குறைந்த 191 குழுந்தைகளும் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் கூறினார்.
சபாவில் அதிகமான குழந்தைகள் மற்றும் சிறார்கள் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது கவலை அளிப்பதாகவும் அவர் சொன்னார். இதுவரை சபாவில் 25,441 பேர் கோவிட் தொற்றின் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

புதிதாக 512 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளான வேளையில் மூவர் உயிரிழந்தனர்.
கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்கள் மன ரீதியில் சோர்ந்துவிடாமல் இருப்பதற்காக அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்படுவதாக மஷிடி தெரிவித்தார்.

மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகள் மற்றும் சிறார்கள் தொடர்ந்து உற்சாகமாக இருப்பதற்கு அவர்களுக்கு வர்ணங்கள் மற்றும் புத்தகங்களும் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். இதுதவிர சிறார்களுக்கு கதை சொல்வது, இசை மற்றும் பாடல்களை கற்றுத்தருவது போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!