Latestமலேசியா

சபா – கெடா : கோவிட் தொற்று வேகமாக பரவுகிறது

கோலாலம்பூர், அக் 17 – சபா மற்றும் கெடாவில் கோவிட்-19 தொற்று மிகவும் வேகமாக பரவி வருகிறது. D64G என்ற கிருமியினால் அவ்விரு மாநிலங்களிலும் கோவிட் தொற்று வேகமாக பரவுவதாக சுகாதாரத்துறையின் தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிசாம் அப்துல்லா தெரிவித்துள்ளர்.

சபாவில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்களில் 70 முதல் 80 விழுக்காட்டினர் முதல் மற்றும் இரண்டாம் நிலையிலான தொற்றை கொண்டிருந்தாலும் அதிக வீரியத்தை கொண்ட D64G கிரிமி இதில் சம்பந்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே சபா மற்றும் கெடாவில் மின்னல் வேகத்தில் இந்த தொற்று பரவிவருவதாக டாக்டர் நோர் ஹிஷாம் கூறினார்.

இதன் காரணமாக தனித்திருக்கும் மையங்கள் மற்றும் சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனைகளில் நோயாளிகளை தனியாக வைத்திருக்கிறோம் என்றும் அவர் சொன்னார். 14 நாட்கள் தனித்திருக்க வேண்டும் என்றாலும் 10 நாட்களுக்குள் கிருமியின் தாக்கம் குறைய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!