Latestமலேசியா

சபா தேர்தலில் அதிக வேட்பாளர்கள் ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமில்லை – அம்னோ கூறுகிறது

ஜோகூர் பாரு, செப் 16- சபா தேர்தலில் அதிகமான வேட்பாளர்களும் கூடுதலான அரசியல் கட்சிகளும் போட்டியிடுவது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல என அம்னோ உதவித் தலைவர் முகமட் காலிட் நோர்டின் தெரிவித்தார். அதிகமானோர் போட்டியிடுவது ஒரு நாட்டின் ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமான வளர்ச்சி என சிலர் கருதினாலும் இது ஆக்கப்பூர்வமான அல்லது விவேகமான நடவடிக்கையாக இல்லையென அவர் சொன்னார்.

எந்தவொரு நோக்கமும் இன்றி தலைவர்களின் குறுகிய கால நலன்கள் மற்றும் சுயநலத்தினால் பலர் சபா தேர்தலில் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர். தம்மைப் பொறுத்தவரை சபாவில் நாம் இப்போது எதிர்நோக்கியிருப்பது ஜனநாயத்திற்கு வளர்ச்சியாக இல்லை.

மேலும் சில கட்சிகள் தங்களது வேட்பாளர்களை முதலமைச்சர் பதவிக்கு பெயர் குறிப்பிடுவதற்கு செய்துள்ள முடிவும் வாக்குகளை பெறுவதற்கு ஒரு தந்திரமாகும். தேர்தல் முடிவுக்கு பிறகுதான் அனைத்தும் சாத்தியமாகும். தேர்தலில் வெற்றி பெற்றால் இவர்தான் முதலமைச்சர் என சில அரசியல் கட்சிகள் கூறும் தந்திரம் நடைமுறைக்கு சாத்தியம் இல்லையென காலிட் நோர்டின் சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!