Latestமலேசியா

சபா தேர்தல் தேசிய முன்னணியும் அதன் கூட்டணியும் 73 தொகுதிகளில் போட்டியிடும்

கோலாலம்பூர், ஆக 2- தேசிய முன்னணியும் அதன் கூட்டணி கட்சிகளும் சபா தேர்தலில் அனைத்து 73 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளன. தொகுதி பங்கீடு தொடர்பாக இன்னும் இரண்டு வாரங்களில் பேச்சு நடத்தப்படும் என சபா அம்னோ தலைவர் புங் மொக்தார் ரடின் கூறினார்,
எனினும் இந்த தேர்தலில் அம்னோ போட்டியிடவிருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து அவர் கருத்துரைக்க மறுத்துவிட்டார். தொகுதி பங்கீடு குறித்து இப்போதைக்கு எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. அம்னோ வலுவாக இருப்பதால் கூடுதல் தொகுதிகள் அதற்கு ஒதுக்கப்படும் என எங்களது கூட்டணி கட்சிகளிடம் நாங்கள் வலியுறுத்துவோம் என அவர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எங்களது கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பெர்சத்து கட்சியுடன் தொகுதி பங்கீடு விவகாரம் குறித்து விவாதிக்கப்படும். இரண்டு வாரத்திற்குள் இது குறித்த தீர்க்கமான ஒரு முடிவு காணப்படும் என அவர் சொன்னார். . பிரதமர் முஹிடின் யாசின் தலைமையிலான பெசத்து கட்சி 45 தொகுதிகளில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் ஹாஜி நோர் இதற்கு முன் கூறியிருந்தார். இதற்கு அம்னோ உட்பட தேசிய முன்னணின் உறுப்பு கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
சபா அம்னோ இம்முறை மாநில தேர்தலில் 85 முதல் 90 விழுக்காடு புதுமுகங்களை நிறுத்தும். தாம் லமாங் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடப்போவதாக கினபத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினருமான புங் மொக்தார் தெரிவித்தார்,

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!