Latestமலேசியா

சமய பண்டிகையான தீபாவளியை மதுபானத்தோடு தொடர்படுத்தி சிறுமைப்படுத்துவதா? – அருண் துரைசாமி கண்டனம்

கோலாலம்பூர், நவ 12 – இந்துக்களின் சமயத் திருநாளான தீபாவளியை மதுபானத்தைதோடு தொடர்புப்படுத்தி வெளியாகியிருக்கும் விளம்பரத்திற்கு இந்து சேவை நிலையத்தை சேர்ந்த அருண் துரைசாமி கண்டனம் தெரிவித்தார்.
மதுபான விளம்பரத்தில் தீபாவளியை தொடர்புபடுத்துவது நமது பண்டிகையின் புனிதத்திற்கும் அதன் மகத்துவத்திற்கும் சிறுமைப்படுத்துவதற்கு ஒப்பானதாகும் என அவர் கூறினார்.

தீபாவளியை மதுபானத்தோடு தொடர்புபடுத்துவது இந்திய சமூதாயத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் செயலாகும் . தொடர்பு பல்லூடக சட்டத்தின் 233விதியின் கீழ் மற்றும் குற்றவியல் சட்டத்தின் 574ஆவது பிரிவின் கீழ் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

தீபாவளியை மதுபானத்தோடு தொடர்புபடுத்தும் விளம்பரங்கள் கண்டிக்கத்தக்கது. கடந்த ஆண்டு பெரிய மதுபான தயாரிப்பு நிறுவனத்திற்கு சட்ட எச்சரிக்கை கடிதம் அனுப்பினோம். அந்த கடிதத்தில் தீபாவளி பண்டிகை , தைப்பூசம் போன்ற சமய விழாவிலும் மதுபானத்தை தொடர்புபடுத்தி விளப்பரப்படுத்க்கூடாது என்று நினைவுறுத்தியிருந்தோம். சம்பந்தப்பட்ட நிறுவனமும் இதனை ஏற்றுக்கொண்டது.

ஆனால் இந்த ஆண்டு பிரபல கலைஞர்கள் மூலமாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுபானத்தை பிரபலப்படுத்தும் விளம்பரங்கள் சமுக வலைத்தலங்களில் தற்போது வெளியாகி வருகிறது. இந்த விளம்பரங்கள் கண்டிக்கத்தக்கது என்பதோடு நாட்டின் சட்டவிதிக்கு எதிரானது என்று அருண் துரைசாமி தெரிவித்தார்.

எனவே இந்து சேவை மையமும் மற்றும் ஆகமம் அணியும் இந்த விளம்பரத்தில் சம்பந்தப்பட்ட கலைஞர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நட்வடிக்கை எடுக்கும். அவர்களுக்கு எதிராக போலீசில் புகார் செய்யப்படும் என்றும் அவர் சொன்னார். தற்போது இந்த சமுக வலைத்தளங்களில் உள்ளூர் கலைஞரகளை பயன்படுத்தி தீபாவளியில் மதுபானத்தை தொடர்புபடுத்தும் இந்த விளம்பரங்கள் சமுக வலைத்தளங்களில் வெளிவந்துக் கொண்டிருப்பதாகவும் இதற்கு பலர் தங்களது கண்டனத்தையும் ஆட்சேபத்தையும் தெரிவித்திருப்பதாக அருண் துரைசாமி கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!