Latestமலேசியா

சம்பூர்னா  மலேசியாவின் இணைய வர்த்தகத்தை மேம்படுத்தும் பயிற்சிப் பட்டறை

கோலாலம்பூர், அக் 1-  சம்பூர்னா  மலேசியா (Sampurna Malaysia) என்ற அரசு சார்பற்ற  பொது இயக்கமும்  ஆக்வொர்ல்ட் ஆசியா    (ArkWorld Asia PLT) என்ற நிறுவனமும்  இணைந்து  இணையப் பயிற்சி பட்டறையை ஏற்பாடு செய்துள்ளனர்.

DISRUPTIVE WOMANIZATION: DIGITIZING MARKETING  என்ற இந்த இலவச இணையப் பயிற்சி பட்டறை  மூலம் மின்    வர்த்கத்தை  மேலும் மேம்படுத்திக்கொள்வதற்கான வியூகங்கள், விற்பனை யுத்திகள், வாடிக்கையாளரிடம்  ஒரு பொருள் எப்படி எளிதாக அறிமுகப்படுத்துவது  உட்பட வர்த்தகத்தை விரிவுபடுத்தும் அடிப்படை நோக்கங்களை இந்த பயிற்சிப் பட்டறை கொண்டுள்ளது.

கோவிட் தொற்றுக்கு முன்  போட்டிக்சனில் நேரடியாக நடத்தப்பட்ட பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டவர்களுக்கு தொடர் பயிற்சியாகவே இம்முறை    முகநூல் மற்றும்  இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளம் மூலம் இப்பயிற்சி பட்டறை  அக்டோபர் 3, அக்டோபர்  17 மற்றும் நவம்பர்  7 ஆகிய  மூன்று நாட்களில் இணையம் மூலம் வழங்கப்படவிருக்கிறது.

இந்த பட்டறையை   முனைவர்  சு.மணிமாறன், ராஜ் குமார், இலுவேந்திரன்  பாலன் மற்றும்  லிவண்யா பிரியா ஆகிய நால்வர் இணைந்து  வழி நடத்துகின்றனர்.   இது குறித்த  மேல் விவரங்களை அறிந்துகொள்வதற்கு  @sampurnamalaysia  முகநூல் பக்கத்தை வலம் வரும்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டனர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!