Latestமலேசியா

சாலையோரத்தில் பெண்ணின் சடலம்; 9 பேர் கைது

கோலாலம்பூர், ஆக 1- படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் பண்டான் இண்டாவில் சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மூன்று வெளிநாட்டவர்கள் உட்பட 9ஆடவர்களை போலீசார் கைது செய்தனர். 20 முதல் 49 வயதுக்கு உட்பட்ட அனைத்து சந்தேகப் பேர்வழிகளும் இரவு 10 மணி தொடங்கி விடியற்காலை 2 மணிவரை செர்டாங்கில் ஸ்ரீ கெம்பாங்ஙான், பெட்டாலிங் ஜெயா சீ பார்க் மற்றும் கோலா லங்காட்டில் சுங்கை ஜாரும் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டனர்.

இந்த சந்தேகப் பேர்வழிகளில் நால்வர் போதைப் பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டனர் என அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி நோர் அஸ்மி யூசோப் தெரிவித்தார். பண்டான் இண்டாவில் சாலை ஓரத்தில் இரவு மணி 8.30 அளவில் 28 வயதுடைய வெளிநாட்டு பெண்ணின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து சந்தேகப் பேர்வழிகளும் கைது செய்யப்பட்டனர்.

அம்பாங் மருத்துவமனையின் மருத்துவ உதவியாளரிடமிருந்து புகார் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். காலணி எதுவுமின்றி முழுமையாக உடையணிந்திருந்த நிலையில் அந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. அந்த பெண்ணின் கழுத்தை சுற்றிலும் மற்றும் உடலிலும் கீறல்கள் ஏற்பட்டதற்கான அறிகுறிகளும் இருந்ததாக ஏ.சி.பி நோர் அஸ்மி யூசோப் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அந்த பெண் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு அவரது உடல் சாலை ஓரத்தில் வீசப்பட்டதாக நம்பப்படுகிறது. மருத்துவ பரிசோதனைக்காக அந்த பெண்ணின் சடலம் கோலாலம்பூர் பொது மருதுவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!