Latestமலேசியா

சிங்கப்பூரில் சிக்கிக் கொண்டுள்ள மலேசியர்களுக்கு உணவுப் பொருள் உதவி ;ஜோகூர் மந்திரிபுசார் உறுதி

இஸ்கந்தர் புத்ரி, நவ 26- ஜோகூருக்கு திரும்ப முடியாமல் சிங்கப்பூரில் சிக்கிக் கொண்டிருக்கும்  மலேசிய தொழிலாளர்களுக்கு  ஜோகூர் அரசாங்கம் விரைவில் உணவுப் பொருட்களை  அனுப்பும் என  ஜோகூர் மந்திரி புசார்  ஹஸ்னி முகமட் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மலேசியர்கள்  சிங்கப்பூரில்  இருக்கும் வரை அவர்களுக்கு  உணவுப் பொருள்  உதவிகள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரிலுள்ள  மலேசிய   தூதரகம் மற்றும்  மலேசிய சிங்கப்பூர் சங்கத்துடன் நாங்கள்  இது தொடர்பாக இணைந்து பணியாற்றுவோம் என்றும்   ஹஸ்னி முகமட் கூறினார்.

கோத்தா இஸ்கந்தரில் மாநில சட்டமன்றத்தில்  2021ஆம் ஆண்டுக்கான  ஜோகூர்  வரவு செலவு திட்ட உரையின் போது அவர் இதனை தெரிவித்தார்.  எல்லை  மூடப்பட்டதால்  சிங்கப்பூரில்  சிக்கிக்கொண்டிருக்கும்  மலேசிய தொழிலாளர்களுக்கு  உதவுவதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கும் என   கடந்த செவ்வாய்க்கிழமையன்று வெளியுறவு அமைச்சர்  ஹிசாமுடின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!