Latestஉலகம்

சிங்கப்பூரில் சிறப்பு தங்கும் விடுதியில் வெளிநாட்டவர் வர்த்தக சந்திப்பை நடத்தலாம்

சிங்கப்பூர், பிப்  23  – வர்த்தக நோக்கத்திற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்படும் தங்கும் விடுதியில், அந்நிய நாட்டு வர்த்தகர்களை அனுமதித்து, நேரடி சந்திப்பை நடத்தும்  முயற்சியில் சிங்கப்பூர் இறங்கியுள்ளது.
அதன் தொடர்பான சோதனையை தற்போது சிங்கப்பூர் மேற்கொண்டுள்ளது.

சிங்கப்பூரின் சாங்கி (Changi)  விமான நிலையத்திற்கு அருகில் உள்ள  கண்காட்சி மையம்,  பிரத்தியேக  தங்கும் விடுதியாக மாற்றப்பட்டிருக்கின்றது.

அந்த தங்கும் விடுதியில், வெளிநாட்டில் இருந்து வரும் வர்த்தகர்கள் , சிங்கப்பூர் மக்களுடன்  சந்திப்பு நடத்தலாம். அவர்களுக்கு  இடையில் திரை ஒன்று போடப்பட்டிருக்கும்.  அவ்விருவரும்   ஒலி பெருக்கியின் மூலமாக உரையாடிக் கொள்வார்கள்.

UV ஊடுகதிர் மூலமாக கடந்து  ஆவணங்களை பரிமாறிக் கொள்ளும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த மாதம்  திறக்க  திட்டமிடப்பட்டிருக்கும்  அந்த பிரத்தியேக தங்கும் விடுதி,   40 அறைகளைக் கொண்டிருக்கும். 150 பேர் வரை  அதில் தங்க முடியும். ஓர் அறையின் ஓர் இரவு கட்டணம் 384 சிங்கப்பூர் டாலராகும்.

தொடக்கத்தில் வர்த்தக நோக்கத்திற்காகவே அந்த தங்கும் விடுதி திறக்கப்பட்டாலும்,  சிங்கப்பூரில் பயிலும் தங்களது பிள்ளைகளைப் பார்க்க வெளிநாட்டு பெற்றோர்களிடமிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!