Latestஉலகம்

சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசியன் லூங் புதிய அமைச்சரவை பட்டியலை அறிவித்தார். 6 புதிய அமைச்சர்கள்

சிங்கப்பூர். ஜூலை 25 – சிங்கப்பூர் அமைச்சர் லீ ஹிசியன் லூங் ஆறு புதிய அமைச்சர்களுடன் அமைச்சரவை பட்டியலை அறிவித்தார். அதோடு அண்மையில் நடைபெற்ற சிங்கப்பூர் தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் செயல் கட்சியைச் சேர்ந்த 7 புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் அமைச்சர்களாக நியமித்தார். அவர்களில் டாக்டர் டான் சீ லெங் பிரதமர் அலுவலக அமைச்சராகவும் மனித வள , வத்த்தக தொழி அமைச்சு ஆகியவற்றின் இரண்டாம் நிலை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ஹெங் சுவி கிட் துணைப்பிரதமராகவும் , நிதி மற்றும் பொருளாதார கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்
ஏற்கனவே அமைச்சரவையில் இருந்த தர்மன் சண்முகரத்னம், எஸ், ஈஸவரன், கா. சண்முகம் மற்றும் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மீண்டும் அமைச்சரவை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
தர்மன் சண்முகரத்னம் மூத்த அமைச்சராகவும் , சமுக கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் க . சண்முகம் உள்துறை மற்றும் சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். எஸ், ஈஸ்வரன் தொடர்பு , தகவல் மற்றும் அனைத்துலக வாணிக தொழில்துறை அமைச்ச்சின் வர்த்தக உறவுகளுக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளியுறவு அமைச்சர் பொறுப்புக்கு டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் அலுவலக அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள திருமதி இந்திராணி ராஜா , தேசிய மேம்பாடு மற்றும் நிதித்துறைக்கான இரண்டாம் நிலை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மூத்த துணை அமைச்சராக 47 வயதுடைய ஜனில் புதுச்சேரி சுகாதாரம, தொடர்பு மற்றும் தகவல் துறைக்கு பொறுப்பேற்றுள்ளார்.
சிங்கப்பூர் எதிர்நோக்கியிருக்கும் கோவிட் 19 தொற்று நெருக்கடி மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பொரளாதார மற்றும் சமுக பிரச்சனைகளை தீர்க்க்க்கூடிய பொருத்தமான மற்றும ஆற்றல் நிறைந்த தலைமைத்துவத்தை அமைச்சரவை கொண்டிருப்பதாக பிரதமர் லீ ஹிசியன் லூங் தெரிவித்தார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!