Latestஉலகம்

சிங்கப்பூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் நகைகள் காணாமல்போன விவகாரம் தலைமை குருக்கள் மீது விசாரணை

சிங்கப்பூர், ஆக 2 – சிங்கப்பூரின் பழம் பெரும் ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தின் நகைகளில் சில காணாமல்போன விவகாரம் தொடர்பில் அதன் தலைமை குருக்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது .அந்த தலைமை குருக்கள் தற்போது ஜாமினில் இருந்து வருவதாக இந்து அறப்பணி அறவாரியத்தின முகநூலில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சிங்கப்பூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் தெரிவித்தது. எனினும் அந்த தலைமை குருக்களின் பெயர் வெளியிடப்படவில்லை,
அடிக்கடி பூஜையின்போது பயன்படுத்தப்படும் அந்த நகைகள் ஆலயத்திலுள்ள சம்பந்தப்பட்ட தலைமை குருக்களின் கண்காணிப்பில் இருந்து வந்துள்ளது. நகைகள் எப்போதும் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக அடிக்கடி பரிசோதனை நடத்தப்படுவது வழக்கம். ஆனால் ஆகக்கடைசியாக நடத்தப்பட்ட பரிசோதனையின்போது நகைகள் காணாமல் போனது தெரியவந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தலைமை குருக்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பிறகு அவர் காணாமல்போன அனைத்து நகைகளையும் அந்த தலைமை குருக்கள் ஒப்படைத்தார். எல்லா நகைகளும் இருப்பதாக மீண்டும் நடத்தப்பட்ட பரிசோதனையில் தெரியவந்ததாக கூறப்பட்டது. வேறு எவரும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்படவில்லை. ஒருவர் மட்டுமே இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளார். இதனால் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது என்றும் ஆலயம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 1827 ஆம் ஆண்டு தென் இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் குடலூர் ஆகிய வட்டாரங்களிலிருந்து வந்தவர்களால் அந்த ஆலயம் கட்டப்பட்டது. சைனா டவுனில் அமைந்துள்ள அந்த ஆலயம் சிங்கப்பூரில் உள்ள இந்துக்களுக்கும் சிங்கப்பூருக்கும் முக்கிய அடையாளமாக விளங்கி வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!