Latestமலேசியா

சித்தியவான் கோழிப் பண்ணையில் தீ; 11 ஆயிரம் கோழிக் குஞ்சுகள் தீக்கிரை!

லுமூட், அக் 23 – பேராக், சித்தியவான் (Sitiawan) கோழிப் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில்  அதிலிருந்த 11 ஆயிரம் கோழிக் குஞ்சுகள் தீக்கிரையாகியுள்ளன.

அதிகாலை ஐந்தரை மணியளவில் அக்கோழிப் பண்ணையில் தீ மூண்டதாக சித்தியவான் தீயணைப்பு-மீட்பு நிலைய அதிகாரி முகமட் ஸாக்கி ஸைனோல் (Mohd Zaki Zainol) தெரிவித்தார்.

கொட்டகைகள் யாவும் பலகைகளால் அமைக்கப்பட்டிருந்ததால், தீ வேகமாகப் பரவி, தீயணைப்பு வீரர்கள் சம்பவத் தளம் சென்று சேர்வதற்குள் பண்ணையின் 50 விழுக்காட்டு பகுதி தீயில் அழிந்ததாக முகமட் ஸாக்கி கூறினார்.

காலை மணி 9.45 மணியளவில் தீயை அணைக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில் தீக்கான காரணமும் இழப்பும் ஆராயப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!