Latestசினிமா

சித்ராவின் கை தொலைபேசி ஆதாரங்கள் அழிக்கப்பட்டனவா? கணவர் ஹேம்நாத்திடம் போலீஸ் தொடர்ந்து விசாரணை

சென்னை, டிச 12- தற்கொலை செய்து கொள்ளப்பட்ட சின்னத்திரை நடிகை சித்ராவின் செல்போன் ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இந்த நிலையில் தொடர்ந்து நான்காவது நாளாக சித்ராவின் கணவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விஜய் டி.வியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ரசிர்களின் அபிமானத்தை பெற்றிருந்த சித்ரா திடீரென புதன்கிழமை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டிருக்க முடியாது. அவரது மரணத்தில் சூது இருப்பதாக அவரது பெற்றோர்களும் ரசிகர்களும் நம்புகின்றனர்.
ஆனால் அவரது மரணம் தற்கொலைத்தான் என பிரேத பரிசோதனையில் தெரியவந்திருப்பதாக போலீசார் கூறியுள்ளனர். அவரது தற்கொலைக்கு எது தூண்டுதலாக இருந்தது என்ற கோணத்தில் போலீசாரின் விசாரணை கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு தளத்திற்கு வந்து அடிக்கடி வந்து சித்ராவின் கணவர் பிரச்சனை கொடுத்ததால் சித்ரா கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தாக கூறப்படுகிறது.
சித்ரா பயன்படுத்திய கைதொலைபேசியை போலீசார் ஆய்வு செய்த்தாகவும் இறப்பதற்கு முன்பு அவர் யாரிடம் பேசிய இருக்கிறார் என்பதை அறிய போலீசார் முயற்சித்துள்ளனர். ஆனால சித்ராவின் கைத்தொலைபேசியில் இருந்த ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக தடயயியல் பிரிவு அதிகாரிகளின் உதவியை போலீசார் நாடுவதற்கு திட்டமிட்டிமிருப்பதாகவும் தெரிகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!