Latestமலேசியா

சிறு இலகு ரக விமானம் பிளாஸ் நெடுஞ்சாலையில் அவசரமாக தரையிறங்கியது

கூலாய், நவ 22 – இன்று காலை, ப்ளாஸ் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 47.8-வது கிலோமீட்டரில் , சிறு இலகு ரக விமானமொன்று அவசரமாக தரையிறங்கியது.

அந்த சம்பவத்தை, கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் தொக் பெங் யீவ் உறுதிப்படுத்தினார். சம்பவ இடத்தில் , போக்குவரத்து போலீசார் உள்ளனர்.

அந்த சிறு இலகு ரக விமானம் விபத்துக்குள்ளாகவில்லை எனவும், அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது என ,   தொக் பெங் யீவ் குறிப்பிட்டார்.

நெடுஞ்சாலையில், அந்த இலகு ரக விமானம் தரையிறங்கியதற்கான விபரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என அவர் மேலும் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!