Latestமலேசியா

சிலாங்கூரில் அதிகமாக 603 பேருக்கு  கோவிட்-19 தொற்று

கோலாலம்பூர், நவ.22 –  நாட்டில் புதிதாக 1,096 பேர் கோவிட்-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிலாங்கூரில் அதிகமாக  603, கோவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இம்மாநிலத்தில் புதிய தொற்றுகள் ,வேலையிடத்துடன்  தொடர்புடையதாகும்.

சபாவில் 311 பேரும், பேராக்கில் 55 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். பகாங், திரெங்கானு, சரவாக் ஆகிய மாநிலங்களில் வைரஸ் தொற்று பதிவாகவில்லை. இதனிடையே, இன்று தொற்று கண்டவர்களைக் காட்டிலும், அதிகமாக 1,104 பேர்  குணமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வேளையில், மூன்று உயிரிழப்புகள் பதிவான நிலயில் ,
தீவிர சிகிச்சைப் பிரிவில்  106 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 46 பேருக்கு சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

சுகாதார தலைமை இயக்குநர் டான் ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா அறிக்கையின் வாயிலாக இந்த விபரங்களை வெளியிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!