Latest

சிலாங்கூர் அரசாங்கம் தண்ணீர் கட்டணத்தை உயர்த்தாது

ஷா அலாம். ஜூலை 22 – சிலங்கூர் அரசாங்கம் தண்ணீர் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை கொண்டிருக்கவில்லை என அம்மாநில மந்திரி புசார் டத்தோ அமிருடின் ஷாரி கூறினார். கோவிட் 19 தொற்றின் தாக்கத்தின் பாதிப்பிலிருந்து மக்கள் இன்னமும் மீளவில்லை என்பதால் இப்போதைக்கு குடிநீர் கட்டணம் உயர்த்தப்படாது என அவர் சொன்னார்.

சரியான நேரம் வரும்போது தண்ணீர் கட்டண விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என அவர் கூறினார். நீடித்த நீர் நிர்வாகம் என்பது சிலாங்கூர் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கியுள்ளது என அவர் சொன்னார். நீர் சேவைகள் சரியான முறையில் வினியோகிக்கப்படாவிட்டால் பயனீட்டாளர்களுக்கு அது பெரும் சுமையை ஏப்டுத்திவிடும் . எனவே அரசியல் லாப நோக்கம் எதுவுமின்றி இந்த விவகாரம் கையாள வேண்டியுள்ளதாக அமிருடின் ஷாரி கூறினார்.

இப்போதைக்கு நாங்கள் தண்ணீர் கட்டண விகிதம் குறித்து விவாதிக்க மாட்டோம். பொருத்தமான நேரம் வரும்போது இது குறித்து விவாதிக்கப்படும் என அமிருடின் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!