Latestமலேசியா

சிலாங்கூர், பினாங்கு உட்பட 4 இடங்களில் புதிய தொற்று

கோலாலம்பூர், அக் 18- சிலாங்கூர், பினாங்கு, லபுவான் மற்றும் சபா என நான்கு இடங்களில் புதிதாக கோவிட் தொற்று மையங்கள் உருவாகியுள்ளன. சிலாங்கூரில் ஆட்டோ,(AUTO) பினாங்கில் அல்மா, (ALMA) சாபவில் கெப்பாயான் சிறை மற்றும் லபுவானில் பா லயாங்கான் ஆகிய இடங்களில் புதிய தொற்று மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
சிலாங்கூரில் பெட்டாலிங், கோலா லங்காட் மற்றும் கிள்ளானையும் நெகிரி செம்பிலானில் சிரம்பானையும் ஆட்டோ தொற்று உள்ளடக்கியுள்ளது. . லபுவானில் பா லயாங்கான் தோற்று மையத்தின் மூலம் நெகிரி செம்பிலானில் ரெம்பாவிலும் ஒருவர் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது, அந்த நபர் சுங்கை பூலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்த இதர 8 பேரும் கோவிட் தொற்றுக்கு உள்ளாகினர்.
கோத்தா கினபாலுவில் கெப்பாயான் தொற்று மையத்திலிருந்து அக்டோபர் 14ஆம் தேதி ஒருவருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அந்த தொற்று மையத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் மூலம் 49 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, லபுவான் லயாங்கான் தொற்று யைத்தில் இதுவரை 142 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்வழி 13 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 67 பேருக்கு தொற்று இல்லை. மேலும் 62 பேர் பரிசோதனையின் முடிவுக்காக காத்திருக்கின்றனர்.
பினாங்கில் தென் செபெராங் பிறை, மற்றும் தெங்கா மாவட்டத்தை உள்ளடக்கிய அல்மா தொற்று மையத்தில் ஒருவருக்கு தொற்று அறிகுறி இருந்தது. அக்டோபர் 14ஆம் தேதி அவருக்கு அந்த தொற்று உறுதியானது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!