Latestமலேசியா

சிலிம் ரீவர் டோல் சாவடிக்கு அருகே மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்ட நால்வர் கைது

ஈப்போ, அக் 17 – மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டதாக நம்பப்படும் நான்கு நபர்கள் சிலிம் ரீவர் டோல் பிளசாவுக்கு அருகே கைது செய்யப்பட்டனர். விடியற்காலை மணி 3.30 அளவில் சாலையோரத்தில் ஆடவர் கும்பல் ஒன்று தகராறில் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்களிடமிருந்து போலீஸ் புகாரை பெற்றதாக பேரா குற்றவியல் விசாரணைத்துறையின் தலைவர் துணை கமிஷனர் அனுவார் ஒத்மான் (Anuar Othman) கூறினார்.

இதனைத் தொடர்ந்து ரோந்து போலீசார் அங்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கிருந்து வெளியேறும்படி போலீஸ்காரர்கள் அந்த ஆடவர்களுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்களில் இருவர் போலீசாரை நோக்கி அவதூறு வார்தைகளால் திட்டினர். மேலும அந்த சம்பவத்தின்போது ஒருவர் போலீசின் தோற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வீடியோ பதிவு செய்ததாகவும் அனுவார் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!