
கோலாலம்பூர், நவ 26 – சீனா விநியோகிக்கும் கோவிட்-19 தடுப்பூசிக்கான நாடுகளின் பட்டியலில், மலேசியாவிற்கு முன்னுரிமை தரப்படும்.அந்த உறுதியை , நாளையுடன் சேவையிலிருந்து விடைபெற்றுக் கொள்ளும் மலேசியாவுக்கான சீன தூதர் பய் தியான் (Bai Tian ) வழங்கியிருப்பதாக ,பிரதமர் டான் ஶ்ரீ முஹிடீன் யாசின் , தமது முகநூல் சமூக ஊடகப் பதிவின் மூலமாக தெரிவித்திருக்கின்றார்.
இவ்வேளையில், மலேசியா – சீனா இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியிருக்கும் பய் தியானிற்கு , மலேசியாவின் சார்பில் முஹிடின் யாசின் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், 1974 –ஆம் ஆண்டு தொடங்கி இரு வழி உறவு பாராட்டப்படுகிறது.
கடந்த 11 ஆண்டுகள் தொடர்ச்சியாக , மலேசியாவின் மிகப் பெரிய வர்த்தக பங்காளியாக சீனா திகழ்வதோட கடந்தாண்டு அந்நாட்டுனான வர்த்தக மதிப்பு 31 ஆயிரத்து 519 கோடி ரிங்கிட்டாக பதிவாகியுள்ளத. மேலும், 2019 ஆம் ஆண்டில் , மலேசியாவில் சீனா செய்த முதலீட்டின் மதிப்பு 1,825 கோடி ரிங்கிட்டாகும்.