Latestமலேசியா

சுகாதார துணையமைச்சர் SOP நடைமுறைகளை மீறவில்லை   

ஷா அலாம், ஜன 14 – MCO நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு காலத்தின் போது, SOP நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை, சுகாதார துணையமைச்சர்   டத்தோ டாக்டர்  நூர் அஸ்மி  கசாலி ( Datuk Dr Noor Azmi Ghazali ) மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை.

துணையமைச்சர்  தனது அலுவலகத்தில்,  MCO காலத்தின் போது அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமானோரை வரவேற்றதாக, அதன் தொடர்பான புகைப்படங்களுடன்,  இரு உள்நாட்டு ஊடகங்கள் செய்தியை வெளியிட்டிருந்தன.  அதை மறுத்து, சுகாதார துணையமைச்சர் அலுவலகம் இன்று அறிக்கையை வெளியிட்டிருந்தது.

சம்பந்தப்பட்ட புகைப்படத்தில்  இருப்பவர்கள்  MCO அமலுக்கு வருவதற்கு முதல் நாள், சுகாதார துணையமைச்சரை  அவரது  அலுவலகத்தில் சந்தித்திருந்ததாகவும்,  ஒரு நாள் கழித்தே அந்த புகைப்படம்  துணையமைச்சரின் சமூக அகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததாகவும், அந்த அறிக்கையில் தெளிவுப்படுத்தபபட்டிருந்தது.

அதையடுத்து சம்பந்தப்பட்ட ஊடகங்கள் ,  சுகாதார துணையமைச்சரை குற்றம் சாட்டியிருந்த  செய்தியை மீட்டுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டன.
அதுபோன்ற பொய்யான செய்தி,  சுகாதார அமைச்சின் மீது மக்கள் தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தச் செய்யுமென, முன்னதாக துணையமைச்சரின் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!