Latestமலேசியா

சுங்கைபூலோ போலீஸ் தலைமையத்தில் அதிகாரிகள் மறுசீரமைப்பா ? ஐ.ஜி.பி விளக்கம்

கோலாலம்பூர். ஆக 12- சுங்கை பூலோ வட்டாரத்தில் இணைய சூதாட்ட மையங்கள் குறித்த விசாரணை முடிவுக்கு வந்தபின்னர்தான் சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைமையத்தில் அதிகாரிகளிடையே மாற்றம் செய்வதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் படோர் தெரிவித்தார்.
போலீஸ் படையின் தலைமைத்துவம் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும். சுங்கை பூலோ வட்டாரத்தில் இணைய சூதாட்டங்கள் அதிகரித்து வந்ததற்கு அந்த மாவட்ட போலீஸ் தலைமையக அதிகாரிகள் மற்றும் போலீஸ்கார்களின் மெத்தன போக்கு காரணமா என்பதை நாம் கண்டறிய வேண்டியிருப்பதாக அவர் சொன்னார்.

இந்த விவகாரம் தொடர்பாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் ஹமிட் படோர் கூறினார். இதுவரை போலீஸ்காரர்கள் அல்லது அதிகாரிகள் எவரும் கைது செய்யப்படவில்லை. விசாரணைக்குப் பிறகு அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என ஹமிட் படோர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!