Latestமலேசியா

சுட்டுக்கொல்லப்பட்ட  4 சந்தேகப் பேர்வழிகளில்  மூவர்  டேசா மெந்தாரியை சேர்ந்தவர்கள்

கோலாலம்பூர், டிச 27-  ரவாங்கில் நிகழ்ந்த கொள்ளைத் தொடர்பில் கிறிஸ்துமஸ் தினத்தன்று  போலீஸ் நடவடிக்கையின்போது சுட்டுக்கொல்லப்பட்ட நால்வரில்  மூவர் பெட்டாலிங் ஜெயா, டேசா மெந்தாரியைச் சேர்ந்தவர்கள் என போலீஸ் பேச்சாளர் அடையாளம் கூறினார்.
அவர்களில் 24 வயதுடைய  பெருமாள் வீரன் ஏற்கனவே பகாங்கில் இரண்டு  ஆண்டு காலம்  வசிப்பிடக் கட்டுப்பாட்டில்  இருந்தபின் 4 மாதங்களுக்கு முன்னர்தான் திரும்பியதாக  கூறப்பட்டது.
மற்றொருவர்  21 வயதுடைய   யூகன்குமார் சிவக்குமார் ஆவார்.
இந்த இருவரின்  அடையாளக் கார்டை வைத்து அவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
டேசா மெந்தாரியைச் சேர்ந்த மற்றொரு நபரான   23 வயதுடைய திருமாறன் ராமசாமியும்  போலீஸ் நடவடிக்கையின் போது  சுட்டுக்கொல்லப்பட்டதாக  அந்த போலீஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
அந்த நடவடிக்கையின்போது  சுட்டுக்கொல்லப்பட்ட நான்காவது சந்தேகப் பேர்வழி கோத்தா டமன்சாராவைச் சேர்ந்தவர் என கூறப்பட்டது.
இதனிடையே  போலீசார் தங்களது நடவடிக்கையின்போது   சந்தேகப் பேர்வழிகளை கைது செய்திருக்கலாம் என  பெருமாளின் தந்தை வீரன் கூறினார். எனது மகன் தவறு செய்திருக்கலாம் . அதனை நான் இல்லையென்று கூறவில்லை.
ஆனால்  குற்றம் புரிந்த அனைவரையும்  கைது செய்து  நீதிமன்றத்தில் நிறுத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் .  ஏற்கனவே  பக்கவாதத்தினால்  பாதிக்கப்பட்டுள்ள தாம்  தமது மகன் சுட்டுக்கொல்லப்பட்டதை அறிந்து பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருப்பதாக  52 வயதுடைய  வீரன் கண்ணீர் மல்க  தெரிவித்தார்.
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!