Latestமலேசியா

சுற்றுலா பஸ் உரிமையாளர்களுக்கு 3 மாதங்களுக்கு மொரடோரியம் ஏற்பாடு

புத்ரா ஜெயா, டிச 4- கோவிட் தொற்று பரவலினால் வருமானத்தை இழந்துள்ள சுற்றுலா பஸ் உரிமையாளர்களுக்கு உதவுவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளது. மொரடோரியம் எனப்படும் கடனை திரும்ப செலுத்துவதற்கான கால அவகாசத்தை மூன்று மாதங்களுக்கு அதாவது மார்ச் மாதம்வரை நீட்டிக்கும் வகையில் அவர்களுக்கு உதவுவதற்கான ஏற்பாட்டை கு அரசாங்கம் செய்துள்ளது.

இதன்வழி நாடு முழுவதிலும் 6,840 சுற்றுலா பஸ்களை கொண்டிருக்கும் 1,800 பஸ் உரிமையாளர்கள் நன்மை அடையும் வகையில் இரண்டு அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுக்களின் மூலம் இது குறித்து இணக்கம் காணப்பட்டது. வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சர் சுரைடா கமாருடின் மற்றும் உள்நாட்டு வாணிகம் மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சர் அலெக்ஸன்டர் நந்தா லிங்கி ஆகியோருடன் சுற்றுலா பஸ் உரிமையாளர் சங்க கூட்டமைப்பும் , சுற்றுலா பஸ் உரிமையாளர் சங்கமும் நடத்திய பேச்சுக்களின் வழி இது தொடர்பான இணக்கம் காணப்பட்டது.

GAPP எனப்படும் சுற்றுலா பஸ் நிறுவன சங்க கூட்டமைப்பு மற்றும் மலேசிய சுற்றுலா பஸ் உரிமையாளர் சங்கத்தின் துணைத்தலைவர் வான் ஷைய்ரி இதனை தெரிவித்தார். அதோடு சுற்றுலா பஸ் உரிமையாளர்களுக்கு உதவுவதற்கு மீட்சித் திட்டத்திற்கான பணிக் குழு ஒன்றை அரசாங்கம் அமைப்பதற்கு முன் வந்திருப்பதையும் அவர் வரவேற்றார்.

GAPP அமைப்பின் தலைவர் அப்துல் அஸிஸ் இஸ்மாயில் மற்றும் தீபகற்ப மலேசிய சுற்றுலா பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஸ்டீவன் சோங்கும் இந்த செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!