Latestஉலகம்

சூடு தாங்கல; மீசையை சரித்த தென் கொரியாவுக்கான அமெரிக்க தூதர

தென் கொரியா, ஜூலை 28 – கோவிட்-19 தாக்கத்தினால் முககவசம் அணிய வேண்டிய கட்டாயம்; வெப்ப சீதோஷணம் வேறு.இவற்றில் எப்படி மீசையை வளர்த்து பாராமரிப்பது? இந்த அவஸ்தையிலிருந்து விடுபட தென் கொரியாவுக்கான அமெரிக்க தூதர் ஹர்ரி ஹரிஸ் (Harry Harris) தனது சர்ச்சைக்குரிய மீசையை சரித்தது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

தென் கொரியாவில் தற்போது இருக்கும் சீதோஷண நிலையில் வெப்பம் தாங்க முடியாமல் மீசையை சரித்தாக அவர் டூவிட்டர் அகப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மீசையை சரிக்க உள்நாட்டு பாரம்பாரிய சிலை அலங்கார நிலையத்திற்கு செல்லும் காணொளியை அவர் பதிவிட்டுள்ளார். மீசையை முழுமையாக சரித்த பின் சுதந்திரமாக உணர்வதாக அவர் டுவிட்டரில் குறிப்பிட்டார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஹர்ரி ஹரிஸ் தென் கொரியாவுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டார். இதற்கு முன் அவரின் மீசை தொடர்பாக சமூக வலைத்தளவாசிகளிடையே பெரும் பிரபலமாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!