Latestமலேசியா

செபெரங் பிறை சிறைச்சாலை அதிகாரிக்குக் கோவிட்-19 தொற்று!

செபெரங் பிறை, அக் 18 – பினாங்கு, ஜாவி (Jawi)யிலுள்ள செபெரங் பிறை (Seberang Perai) சிறைச்சாலையில் பணி புரியும் அதிகாரி ஒருவருக்குக் கோவிட்-19 நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

செபெரங் பிறை சிறைச்சாலையின் 53 கைதிகள் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளாகியிருக்கும் வேளையில் அங்கு சிறைச்சாலை அதிகாரிக்குக் கோவிட்-19 நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது இதுவே முதல் சம்பவம் என பினாங்கு சிறைச்சாலைத் துறை இயக்குனர் ரொஸ்லான் முகமட் (Roslan Mohamed) தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அதிகாரியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் மீது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட வேளையில் முடிவுக்காகத் தமது தரப்பு காத்திருப்பதாக ரொஸ்லான் கூறினார்.

சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எவ்வாறு நோய்த் தொற்று ஏற்பட்டது என்பதைத் தாங்கள் தொடர்ந்து கண்டறிந்து வருவதாகவும் அவர் சொன்னார்.

இதனிடையே பினாங்கு ரெமான் (Reman) சிறைச்சாலையில் பதிவாகியுள்ள 160 புதிய நோய்த் தொற்று சம்பவங்கள், கைதிகளை உட்படுத்தியவை என ரொஸ்லான் கூறினார்.

ரெமான் சிறைச்சாலையில் நோய்த் தொற்று சம்பவங்கள் அதிகரித்துள்ள போதிலும், அங்கு நிலைமையைக் கட்டுப்படுத்த, அனைத்து SOP விதிமுறைகளும் முழுமையாகக் கடைபிடிக்கப்படுவதாக அவர் மேலும் சொன்னார்.

பினாங்கில் இதுவரை 439 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் மூவர் மரணமடைந்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!