Latestஉலகம்

செவ்வாய் கிரகத்தில் மார்ஸ் விண்கலத்தை தரையிறக்கி சாதனை படைத்த டாக்டர் ஸ்வாதி மோகன்

வாஷிங்டன், பிப் 20- பூமியில் மட்டும் அல்ல விண்வெளியிலும் சாதனை படைக்கும் ஆற்றல் பெண்களுக்கு இருக்கிறது என்பதை நிருபித்திருக்கிறார் அமெரிக்க இந்திய வம்சாவளி பெண்ணான டாக்டர் ஸ்வாதி மோகன். அமெரிக்காவின் நாசா விண்வெளி முகமை வெற்றிகரமாக பெர்சவரன்ஸ் ரோவர் ( Perseverance rover ) இயந்திரத்தை செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கினார்.

பெர்சவரன்ஸ் ரோவர் நேற்று முன்தினம் பிப்ரவரி 18 ஆம் தேதி வியாழக்கிழமை பிப்ரவரி 18ஆம் கிரின்வீச் நேரப்படி இரவு மணி 20.53க்கு செவ்வாய் கிரகத்தில் தரையிறப்பட்டது. தரையிறங்கப்பட்டது உறுதியானது என்ற வார்த்தையை புன்னகையோடு ஸ்வாதி உதிர்த்தபோது கலிபோர்னியாவிலுள்ள நாசா ஆய்வகத்தின் பணியாளர்கள் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மார்ஸ் 2020 திட்டத்தில் வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டு இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் மார்ஸ் 2020 விண்கலம் விண்வெளியில் சரியான பாதையில் பயணிப்பதை உறுதிப்படுத்திய பின்னர் அந்த விண்கலத்தை தேவையான இடத்திற்கு கொண்டுச் சென்று தரையிறக்கும் பொறுப்பைம் சிறந்த முறையில் ஆற்றி பெண்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறார் டாக்டர் ஸ்வாதி மோகன்.

ஒரு வயது குழந்தையாக இருந்தபோதே இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடியேறிய அவர் வடக்கு வெர்ஜினியா மற்றும் வாஷிங்டன் நகரை ஒட்டிய பகுதியில் வளர்ந்து Cornel பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் மற்றும் ஏரோஸ்பேஸ் பொறியில் துறையில் பட்டம் பெற்றார். பிறகு Massachusetts தொழிற்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஏரோனாட்டிக்ஸ் மற்றும் Astronautics பிரவில் முதுகலை அறிவியல் மற்றும் முனைவர் பட்டத்தையும் பெற்ற பின்னர் தமது நீண்ட நாள் கனவாக நாசாவில் இணைந்தார்.

2013 ஆம் ஆண்டு முதல் மார்ஸ் திட்டத்தில் வேலை செய்துவரும் அவர் 2020 இல் செவ்வாய் கிரக திட்டத்தில் இடம்பெற்றார். கலிபோர்னியாவில் இருக்கும் நாசாவின் ஜெட் ப்ரோபல்சன் ஆய்வகத்தில் அவர் பணியாற்றி வருகிறார். நாசாவில் 17,000த்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்துவருகின்றனர். அவர்களில் ஒரு விழுக்காட்டினர் மட்டுமே அமெரிக்க வம்வாவளியினர். அவர்களுக்கு மட்டுமின்ற ஒட்டுமொத்த அமெரிக்க மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள பெண்களுக்கும் டாக்டர் ஸ்வாதி பெருமையை சேர்த்திருக்கிறார்.

செவ்வாய் கிரகத்தில் இயந்திர ரோவரை நாசா களமிறக்கியது இரண்டாவது முறையாகும். இந்த ரோவர் செவ்வாயில் உயிரினிங்கள் இருக்கிறதா அல்லது உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும். ஆறு சக்கரங்களைக் கொண்ட இந்த பெர்சவரன்ஸ் ரோவர் அடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாய் கோளின் பாறைகளை துளையிடுவது மற்றும் அக்கோளில் முன்பு உயிரினங்கள் வாழ்நதிருக்கின்றனவா என்ற ஆதாரங்களை தேடும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!