
கிள்ளான், பிப் 23- சொந்த மகளையும் அவரது வகுப்பு தோழியான 14 வயது மாணவியையும் கற்பழித்தாக 42 வயது ஆடவர் மீது 67 குற்றச்சாட்டுக்கள் கொண்டு வரப்படவுள்ளன. . கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தனது மகள் 10 வயதாக இருந்தது முதல் அந்த நபர் இந்த கொடுர செயலை புரிந்து வந்துள்ளான் என தென் கிள்ளான் போலீஸ் தலைவர் Shamsul Amar Ramli ( சம்சுல் அமார் ரம்லி) தெரிவித்தார்.
அந்த சந்தேகப் பேர்வழி மீது நாளை கிள்ளான் செஷன்ஸ் நீதமன்றத்தில் குற்றச்சாட்டு கொண்டு வரப்படும் என சம்சுல் அமார் கூறினார். இந்த சந்தேகப் பேர்வழி கரும்புச் சாறு விற்பனையாளராக இருந்து வந்த்தோடு இதற்கு முன் போதைப் பொருள் சம்பந்தப்பட்ட இரண்டு குற்றப் பின்னணியும் கொண்டிருந்த்தாக கூறப்பட்டது.