Latestஉலகம்

ஜப்பானின் புதிய பிரதமர் – யோஷிஹிடே சுகா!

தோக்யோ, செப் 16 – ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹிடே சுகா (Yoshihide Suga) நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ஷின்ஸோ ஆபே (Shinzo Abe)வின் கொள்கைகளின் பால் மிகுந்த நாட்டமும் மதிப்பும் கொண்டவரான சுகா, ஆபேவின் திட்டங்களைத் தொடருவார் என்ற பெரும் நம்பிக்கைக்கு இடையில் ஜப்பானிய நாடாளுமன்றம், சுகாவை நாட்டின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுத்துள்ளது.

71 வயது சுகா, நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 462 வாக்குகளில் 314 வாக்குகளைப் பெற்று, மிக எளிதாக பிரதமர் பொறுப்புக்குத் தேர்வாகியுள்ளார். சுகா, ஜப்பானிய அமைச்சரவையின் தலைமைச் செயலாளராக இருந்தவர் ஆவார்.

இன்று பின்னேர வாக்கில் பிரதமர் சுகா, தனது அமைச்சரவை உறுப்பினர்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது. முன்னாள் பிரதமர் ஆபேவின் நிர்வாகத்தில் இருந்த பெரும்பாலான அமைச்சர்களை, சுகாவும் தக்க வைத்துக் கொள்வார் என்றே நம்பப்படுகிறது.

உடல் நலக் குறைவு காரணமாக, அபே அண்மையில் பிரதமர் பொறுப்பில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!