Latestஉலகம்

ஜோ பைடனுக்கு அதிகாரத்தை மாற்றுவதற்கு முன்வந்தார் டிரம்ப்

வாஷிங்டன், நவ 24 – அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு, முறையாக ஆட்சி அதிகார மாற்றம் செய்யத் தொடங்குவதற்கு நடப்பு அதிபர் டொனால்டு டிரம்ப் இணக்கம் தெரிவித்துள்ளார். இதனால் ஜோ பைடன் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதே வேளையில் தாம் தேர்தலில் தோல்வி அடைந்து விட்டதாக டிரம்ப் இன்னும் முறைப்படி ஒப்புக்கொள்ளவில்லை. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் தேர்தல் சபையின் 306 வாக்குகளைப் பெற்றதைத் தொடர்ந்து அதிபராகவும், துணையதிபராக கமலா ஹரிசும் வெற்றி பெற்றனர்.

ஆனால் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாத நிலையில் ஜனவரி 20 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பதவி ஏற்பு நிகழ்வுக்கான முழுமையான ஏற்பாடுகளில் ஜோ பைடன் ஈடுபட முடியாத இழுபறி நிலை ஏற்பட்டிருந்தது.

அதிபர் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து எதிர்ப்பேன் என டோனல்ட் டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளபோதிலும் ஜோ பைடன் அதிபர் பதவியேற்க என்ன செய்ய வேண்டுமோ அவற்றை முறையாகச் செய்வதற்கு (GSA) எனப்படும் பொதுச் சேவை நிர்வாக அரசு அமைப்பிடம் பரிந்துரை செய்துள்ளார்.

அதோடு தேர்தல் முடிவுகளை எதிர்க்கும் சட்ட நடவடிக்கைகளில் டிரம்ப் ஆதரவாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!