Latestமலேசியா

டாக்டர் மகாதீருடன் பணியாற்றியதற்காக வருத்தப்படுகிறேன் – ராம் கர்ப்பால்

கோலாலம்பூர், அக் 20 – முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீருடன் இணைந்து பணியாற்றியதற்காக தாம் மிகவும் கவலைப்படுவதாக டி.ஏ,பியின் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினரான ராம் கார்பால் சிங் கூறினார். இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு மகாதீர்தான் காரணம் என அவர் சாடினார்.

லங்காவி நாடாளுமன்ற உறுப்பினரான மகாதீர் நாட்டில் 3ஆவது முறையாக பிரதமராகுவதற்கு தகுதி இல்லாதவர் என தமது முகநூலில் பதிவேற்றம் செய்த கட்டுரையில் ராம் கர்ப்பால் கூறியுள்ளார். பெரும்பான்மை ஆதரவை இழந்துவிட்டதாக கூறி கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக மகாதீர் அறிவித்தார்.

மலேசிய பிரஜை என்ற முறையில் என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். மகாதீரைத் தவிர வேறு எவரும் நாட்டில் பிரதமராகுவதற்கு தகுதி இல்லையா? பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்போது அப்போது வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு ஏற்ப அப்பதவியை பின்னர் அன்வாரிடம் ஒப்படைப்பதாக மகாதீர் கூறினார். ஆனால் இன்று அன்வார் பிரதமர் பதவிக்கு தகுதியில்லாவர் என்று மகாதீர் கூறுகிறார்.

அன்வார் தகுதியில்லாதவர் என்றால் ஏன் எங்களிடம் முன்கூட்டியே கூறவில்லை. தேர்தல் வெற்றிக்காக மட்டும்தான் உங்களுக்கு அன்வார் தேவைப்பட்டாரா? என்றும் ராம் கர்ப்பால் வினவினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!