Latestஅமெரிக்காஉலகம்

டிரம்ப் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடலாம்; வாஷிங்டன் டி.சி-யில் அவசரநிலை

வாஷிங்டன், ஜன 12 – ஜோ பைடனின் அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு  முன்பாக, அமெரிக்காவின் அனைத்து தலைநகர்களிலும்  ஆயுதமேந்திய ஆர்ப்பாட்டம் நிகழலாமென, FBI- மத்திய விசாரணைப் பிரிவு எச்சரித்துள்ளது.

ஜனவரி 20 –ஆம் தேதி , அமெரிக்காவின் Capitol நாடாளுமன்றக் கட்டடத்திற்கு முன், அதிபராக ஜோ படைனும்,  துணை அதிபராக கமலா ஹரிஸ்- சும் ,  பதவிப் பிரமானம் எடுத்துக் கொள்ளவிருக்கின்றனர்.

எனினும், ஆர்ப்பாட்ட அச்சுறுத்தலலை அடுத்து, அன்றைய தினம்  தாம் பதவிப் பிரமானம் எடுத்துக் கொள்ள அஞ்சுவதாக செய்தியாளர்களிடம் ஜோ பைடன் கூறியிருந்தார்.

இவ்வேளையில், அந்த அச்சுறுத்தலை அடுத்து, வாஷிங்டன் டி.சி- யில்
( Washington DC )  அதிபர் டோனல்ட் டிரம்ப்  ஜன 11 முதல் ஜனவரி 24 -ஆம் தேதி வரை
அவசர கால நிலையை அறிவித்திருக்கின்றார்.

அதையடுத்து, இவ்வார இறுதியில் 10,000 –க்கும் அதிகமான துருப்புகள் ,  வாஷிங்டன் டி.சி-யில்  களமிறக்கப்படுவார்கள், அந்நாட்டின்  தேசிய  பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!