
புதுடில்லி, ஜன 2 – இந்தியாவில் டில்லியில் தொடர்ந்து கடும் குளிர் நீடித்து வருகிறது. அதோடு டில்லியில் வரலாறு காணாத அளவில் பனிப்பொழிவு மற்றும் புகைமூட்டமும் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
கடுமையான பனிப்பொழிவு மற்றும் புகைமூட்டம் காரணமாக வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாக நகர்ந்து செல்கின்றன. கடும் பனிப் பொழிவினால் வாகன ஓட்டிகள் வாகனத்தை செலுத்துவதிலும் சிரமத்தை எதிர்நோக்குவதாக கூறப்பட்டது.
கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டில்லியில் கடந்த டிசம்பர் மாதம் கடும் பனிப் பொழிவு காரணமாக வெப்பநிலையும் கடுமையாக குறைந்தது. புத்தாண்டிலும் இந்த நிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.