Latestஉலகம்

டொனால்ட் டிரம்புக்காக விரதமிருந்து உயிரையே தியாகம் செய்த இந்திய விவசாயி!

புதுடெல்லி, அக் 16 – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) மீது கொள்ளை பிரியம் வைத்திருந்த இந்தியா, தெலுங்கானாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர், டிரம்ப்புக்காக தனது உயிரையே தியாகம் செய்துள்ளார்.

டிரம்ப்புக்கு கோவிட்-19 நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதாகத் தகவல் வெளியானதும், புஷ் கிருஷ்ணா எனும் அந்த 35 வயது விவசாயி கதறி அழுது, சோகத்தில் மூழ்கியதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.  டிரம்ப் கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளார் என்ற செய்தி, நோய்வாய்ப்படும் அளவுக்கு கிருஷ்ணாவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியதாக அவரது குடும்பத்தார் கூறினர்.

டிரம்ப்  குணமடைய வேண்டி சதா சர்வ காலமும் கண் விழித்து பிரார்த்தனை செய்ததோடு விரதமும் இருந்துள்ளார் கிருஷ்ணா.  73 வயது டிரம்ப்பை கடவுளுக்கு இணையாகக் கருதிய கிருஷ்ணா, அவரது உருவப் பொம்மையை அமைத்து அதற்கு பூஜையும் செய்து வந்துள்ளார்.

டிரம்ப், கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து விட்டதாகச் செய்தி வந்த பின்னர்தான் கிருஷ்ணாவின் முகத்தில் சிரிப்பையே காண முடிந்ததாம். அதன் பிறகு அவர் தமது விரதத்தையும் முடித்துக் கொண்டார்.

ஆனால் விரதத்தை முடித்த மறுநாளன்றே கிருஷ்ணா மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார்.  கிருஷ்ணாவின் மரணச் செய்தி அறிந்த மக்கள், அமெரிக்காவின் அந்த 34ஆவது அதிபர் மீது ஒருவருக்கு இந்தளவுக்குப் பிரியம் இருக்க முடியுமா என ஆச்சரியப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!