தந்தைக்கு காரை பரிசளிக்க சென்ற இரு சகோதரர்கள் மரணம்

சிரம்பான், பிப் 28 – தந்தைக்காக வாங்கிய காரை அவரிடம் வழங்க சென்றுக் கொண்டிருந்த இரு மகன்களின் எண்ணம் இறுதியில் ஈடேறாமல் போனது.
நேற்று மாலை மணி 4.15க்கு, குவாலா பிலா-சிம்பாங் பெர்தாங் சாலையின் 17 -வது கிலோமீட்டரில் நிகழ்ந்த விபத்தில், தந்தைக்காக வாங்கிய காரை ஓட்டிச் சென்ற 44 வயது ஹஃபிட்சான் சய்னால் உயிரிழந்தார்.
தனது சகோதரரைப் பின்னாள் மற்றொரு காரில் 39 வயது முஹமட் ஃபவுசி சய்னால் பின்தொடர்ந்தார். தனது சகோதரர் விபத்தில் சிக்கியதைக் கண்டு அவருக்கு சம்பவ இடத்தில் வலிப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
சம்பவத்தின்போது , அவ்விரு சகோதரர்களும், தங்களது 63 வயதான தந்தைக்கு பரிசளிப்பதற்காக , ஜெலெபு , பாசோ ஃபெல்டா நில குடியிருப்பு பகுதியில் ,பயன்படுத்தப்பட்ட காரொன்றை வாங்கிக் கொண்டு , வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.