Latestமலேசியா

தனித்திருக்கும் விதிமுறையை மீறிய அமைச்சர் கைருடின் மீதான நடவடிக்கைக்காக போலீஸ் காத்திருக்கிறது.

கோலாலம்பூர், செப் 16 – கோவிட் தொற்று பரவுவதை தடுக்கும் தனித்திருக்கும் விதிமுறையை பின்பற்றத் தவறிய தோட்ட தொழில் மற்றும் மூலத்தொழில் அமைச்சர் டாக்டர் முகமட் கைருடினுக்கு எதிராக அடுத்த கட்ட நடவடிக்கைக்காக போலீஸ் காத்திருக்கிறது. சட்டத்துறை தலைவர் அலுவலகத்தின் முடிவுக்கு பிறகே போலீசின் அடுத்த நடவடிக்கை இருக்கும் .

சட்டத்துறை அலுவலகத்தின் அனுமதி கிடைத்தவுடன் முகமட் கைருடினுக்கு எதிராக குற்றசாட்டு கொண்டுவரும் நடைமுறை தொடங்கும் என புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத்துறையின் துணை இயக்குனர் மியோர் பரிடலத்ரஸ் வாஹிட் ( Mior Faridalathrash Wahid ) கூறினார்.

புதிய விவரங்கள் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை. விசாரணை அறிக்கை சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. என அவர் சொன்னார். முகமட் கைருடின் தனித்திருக்கும் விதிமுறையை பின்பற்றத் தவறியது தொடர்பாக நாடு முழுவதிலிருந்தும் 27 புகார்களை போலீஸ் பெற்றது. இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராக விசாரண நடத்தப்பட்டதாக மியோர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!