Latestமலேசியா

தனிமைப்படுத்தும் மையத்தின் கழிவறைகளை சுகாதாரப் பணியாளர்கள் சுத்தப்படுத்தினர்  

கோத்தா கினபாலு; ஜன 14- சபா, லிக்காஸ்- சில் ( Likas)  கோவிட் -19  தனிமைப்படுத்தும் மையத்தில் ,  கழிப்பறைகள் அசுத்தமாக இருப்பதாக, சில நோயாளிகள் சமூக ஊடகங்களில்  சுட்டிக் காட்டியதை அடுத்து, சுகாதாரப் பணியாளர்கள் அம்மையத்தில் உள்ள குளியல் அறைகளையும், கழிப்பறைகளையும்  தூய்மைப்படுத்தினர்.

அந்த மையத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர், மேலும் மூவருடன் சேர்ந்து அந்த தனிமைப்படுத்தும் மையத்தில் உள்ள  குளியல் அறைகளைக் கழுவி சுத்தப்படுத்தினார். அந்த காட்சியை அவர் படமெடுத்து , பேஸ்பூக்  ( Facebook )  சமூக ஊடகத்தில்  பகிர்ந்திருந்தார்.

அந்த தனிமைப் படுத்தும் மையத்தில்  , கைகழுவும்  சிங்க் ( SINK ) தொட்டிகள் அடைத்துக் கொண்டிருப்பதாகவும் , குப்பைகள் வீசப்படாமல் இருப்பதாகவும் அவர் குறைகூறியிருந்தார். அதையடுத்து,  அந்த தனிமைப் படுத்தும் மையத்தை சுத்தப்படுத்திய  மாநில சுகாதார துறைக்கு அந்த நபர் நன்றி கூறி ஒரு பதிவையும் வெளியிட்டிருந்தார்.

இவ்வேளையில் இதுபோன்ற பிரச்னைகள் மீண்டும் எழாமல் இருப்பது உறுதிச் செய்யப்படுமென,  சபா மாநில சுகாதார இயக்குநர்  டத்தோ டாக்டர் கிறிஸ்டினா  ருன்டி (Datuk Dr Christina Rundi ) தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!