Latestமலேசியா

தவறுதலாக கத்தி குத்தி 7 வயது சிறுவன் மரணம் ; தீபாவளிக்கு முதல் நாள் நிகழ்ந்த துயரம்

ஈப்போ, நவ 15 – வீட்டிற்குள் ஓடி வந்த சிறுவன் மீது உறவினரின் 11 வயது சிறுமி எடுத்து வந்த கத்தி குத்தியதால் அச்சிறுவன் உயிரிழந்தான். இந்த பரிதாப சம்பவம் தீபாவளி முதல் நாளன்று இரவு மணி 10.20 அளவில் சித்தியவான் தாமான் செம்பாகா கம்போங் கோவிலுள்ள வீட்டின் வெளியே படிக்கட்டியில் நிகழ்ந்தது.

சித்தியாவான் தாமான் செம்பாகா கம்போங் கோவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் ஏழு வயது சிறுவன் ஆதித்தியன் த/ பெ. ஜெகதீசன் இறந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர். தீபாவளிக்காக குடும்ப மாதான ஜெயசுதா தமது வீட்டில் அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கயிறை வெட்டுவதற்காக தமது 11 வயது தங்கையிடம் கத்தியை எடுத்து வரும்படி ஜெயசுதா கூறியுள்ளார்.

தமது தங்கை வீட்டிலிருந்து கத்தியை எடுத்துக்கொண்டு வேகமாக படியில் இறங்கிக்கொண்டிருந்தபோது அருகேயுள்ள தமது உறவினர் வீட்டிலிருந்து ஆதித்தியன் வேகமாக ஓடிவந்து வீட்டின் படியில் ஏறியபோது தமது சகோதரியின் மேல் மோதியதால் அவரது கையில் வைத்திருந்த கத்தி தவறுதலாக அவனது நெஞ்சில் குத்தியது. இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சிக்குள்ளான நாங்கள் அனைவரும் உடனடியாக ஆதித்தியனை ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டுச் சென்றோம் என ஜெயசுதா தமது போலீஸ் புகாரில் கூறியுள்ளார்.

அங்கு ஆதித்தியனை பரிசோதனை செய்த மருத்துவர் அவன் மரணம் அடைந்ததை உறுதிப்படுத்தியதாக 23 வயதுடைய ஜெயசுதா தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஜெயசுதா போலீசார் புகார் செய்துள்ளார். இதனிடையே மருத்துவ பரிசோதனைக்காக ஆதித்தியன் உடல் ஈப்போ ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது. இந்த சம்பவத்தை உறுதிப்படுத்திய மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் நோர் ஓமார் சாபி இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!