Latestமலேசியா

தாக்கப்பட்ட நேப்பாள பாதுகாவலர் இன்னும் புகார் செய்யவில்லை

கோலாலம்பூர், ஆகஸ்ட்  1 – கார் நிறுத்துமிடத்தில் ஆடவர் ஒருவர் கட்டையினால் நோப்பாள பாதுகாவலரை தாக்கியது தொடர்பில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

ஜூலை 7ஆம் தேதி வங்சா மாஜூ ஜாலான் மட்ரசாவில் ஆடம்பர அடுக்கு மாடி குடியிருப்பின் கார் நிறுத்தும் பகுதியில் இச்சம்பவம் நடத்துள்ளது என விசாரணை மூலம் தெரியவருதாக வங்சா மாஜூ மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரடன்ட் ரஜாப் ஆஹாட் இஸ்மாயில் ( Rajab Ahad Ismail) தெரிவித்தார்.

அந்த தாக்குதலில் ஈடுபட்ட சந்தேகப் பேர்வழி பாகிஸ்தான் பிரஜை என்றும் அந்த கட்டிடத்தில் நேப்பாள பிரஜை பாதுகாவலராக இருந்து வந்தார் என்றும் அவர் சொன்னார். தண்டனை சட்டத்தின் 324ஆவது விதியின் கீழ இந்த சம்பவம் குறித்து விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது. சமுக வலைத்தளத்தில் வைரலான இச்சம்பவம் குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது. எனினும் பாதிக்கப்பட்ட அந்த நேப்பாள பாதுகாவலர் தாம் தாக்கப்பட்டது குறித்து இன்னமும் புகார் செய்யவில்லை என்றும் ரஜாப் தெரிவித்தார் . சம்பந்தப்பட்ட தரப்பினர் தாங்களாகவே முன்வந்து புகார் செய்தால் விசாரணைக்கு உதவியாக இருக்கும் என்றும் அவர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!