Latestஉலகம்

தாய்லாந்து அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் மோசமடைகிறது

பேங்காக், டிச, 17- தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் மோசமடைந்து வருகிறது. ஆர்ப்பாட்டத்தில் மக்கள் பங்கேற்கக்கூடாது என அரசாங்கம் விதித்த கடுமையான எச்சரிக்கையையும் மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர். தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றிரவு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக கலகத் தடுப்பு போலீசார் கண்ணீர் புகை மற்றும் ரசாயன நீரை பயன்படுத்தினர்.

பேங்காக் நகரின் முக்கிய வர்த்தக மையத்திற்கு அருகே சுமார் 3,000த்திற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடி ஏற்கனவே கைது செய்யப்பட்ட தங்களது நண்பர்களை விடுதலை செய்யும்படி கோரிக்கை விடுத்தனர். அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்பதோடு தாய்லாந்து அரசமைப்பில் சீரமைப்பு செய்யும்படியும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இன்றும் நாளையும் பேங்காக் தெருக்களில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி மோசமான வன்முறையை பாதுகாப்பு படையினர் பயன்படுத்திவருவதால் இந்த அடக்குமுறைக்கு எதிராக மேலும் அதிகமான பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.

ஆர்ப்பாட்டத்தின்போது நடைபெற்ற கலவரத்தில் 11 ஆர்ப்பாட்டக்காரர்களும் நான்கு அதிகாரிகளும் காயம் அடைந்தனர். பேங்காக்கில் நவம்பர் 13ஆம்தேதிவரை அரசாங்கம் அவசநிலையை அறிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!